Back to Top

எரிபொருள் தாங்கிகளை விற்க இடமளிக்க மாட்டேன்

எரிபொருள் தாங்கிகளை விற்க இடமளிக்க மாட்டேன்

October 12, 2018  05:26 pm

Bookmark and Share
நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். நாட்டை காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது நோக்கமானது எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதேயாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (12) பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய ஊழியர்களில் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளான ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவின் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பனை செய்வது தொடர்பான கருத்துக்கு பதில் கூறும் முகமாகவே பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ´நாங்கள் தவறு செய்திருந்தால் அதனைத் திருத்தவே நாங்கள் முயற்ச்சி செய்கின்றோம். நாங்கள் கடந்த ஆண்டு சிறந்த முறையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நிர்வகித்துள்ளோம். நாங்கள் பதவிக்கு வந்த பிறகு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை நிறுத்தியுள்ளோம். குறிப்பாக தரமற்ற எரிபொருள் கலப்பு மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதை தடுத்து நிறுத்தியுள்ளோம். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பது தொடர்பாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன. 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமையவே இந்திய நிறுவனத்துக்கு திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அதில் எவ்வித அபிவிருத்தியையும் செய்யவில்லை. எனினும் இந்திய நிறுவனம் பல இலாபங்களை இந்த எரிபொருள் தாங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டது. 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதாவது பிழையிருந்திருந்தால் அந்த நேரமே ஜே.வி.பி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு சொல்லி ஒப்பந்தத்தை மாற்றியிருக்கலாமே.

நான் எடுத்துள்ள முயற்சியானது எமது நாட்டுக்கு பயனுள்ள வகையிலேயேயாகும். இந்திய எரிபொருள் நிறுவனம் 15 எரிபொருள் தாங்கிகளையே பயன்படுத்தி வருகின்றது. அமைச்சரவை அனுமதியளித்துள்ள 16 எரிபொருள் தாங்கிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொதுமக்கள் நிறுவனத்துடன் இனைந்து பயன்படுத்தவுள்ளது. நான் இதனை புறக்கனித்திருக்கலாம் இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில், ஆனால் அப்படி செய்யவில்லை. நாட்டின் நலன் கருதியே இதை செய்யவுள்ளோம். நாங்கள் இந்த எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

போர்காலத்திலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை இந்தியாவுக்கு வழங்கப்படாமல் இருந்திருந்தால் எரிபொருள் தாங்கிகள் விடுதலை புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருக்கும். இதை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருக்கும் ஒருவர் தற்போது பிரதேச சபை உறுப்பினராக உள்ளார். அவர் எம்மை திருடர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் விசாரணை குழு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் செயற்பாட்டில் இருந்துள்ளனர்.

நாங்கள் அதனை மாற்றி அமைத்துள்ளோம். அதன் பிரதிபலிப்பாகவே கடந்த காலத்தில் பல எண்ணெய் கலப்பு நடவடிக்கைகள் மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டரியப்பட்டு அதற்கெதிரான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நானும் எனது அமைச்சின் செயலாளரும் இதுபோன்ற பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எங்களால் மற்றவர்களின் விருப்பத்திற்கினங்க செய்றபட முடியாது´ என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Viewed