Back to Top

ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

October 12, 2018  06:54 pm

Bookmark and Share
ஒரு தொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமாக டுபாய் நாட்டுக்கு கொண்டு செல்ல முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் பஹ்ரைன் ஊடாக கல்ப் விமான சேவைக்கு சொந்தமான ஜீ.எப் 139 என்ற விமானத்தில் பஹ்ரைன் ஊடாக டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான 23 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Most Viewed