Back to Top

எல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் உறுதியான திகதி இல்லை

எல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் உறுதியான திகதி இல்லை

October 13, 2018  03:07 pm

Bookmark and Share
மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்பு குழு அறிக்கை வௌியிடப்படும் திகதி தொடர்பாக உறுதியாக தெரிவிக்க முடியாது என்று அந்தக் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் செயல் தற்போது நடைபெற்று வருகின்றது என மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வடமேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலப்பகுதி சமீபத்தில் முடிவடைந்தது.

அதன்படி மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவது சம்பந்தமாக அத தெரண மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சிடம் தொடர்பு கொண்டு வினவியது.

மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தபின், ஜனாதிபதி அது தொடர்பில் அறிவிப்பார் என்று அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.

அது சம்பந்தமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பொறுப்பல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையின் மறுசீரமைப்புக்காக பிரதமர் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்தக் குழு மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கையை இரண்டு மாத காலத்தில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

Most Viewed