Back to Top

ஹெரோயினுடன் ஒருவர் ​கைது

ஹெரோயினுடன் ஒருவர் ​கைது

October 14, 2018  02:11 pm

Bookmark and Share
கிரான்பாஸ், வதுள்ளவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் ​கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்த 25 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வதுள்ளவத்த பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.