Back to Top

வெளிநாட்டி இருந்து பணம் அனுப்பும் செயற்பாட்டு - றிப்பிள்நெட்டுன் இணைந்துள்ள கொமர்ஷல் வங்கி

வெளிநாட்டி இருந்து பணம் அனுப்பும் செயற்பாட்டு - றிப்பிள்நெட்டுன் இணைந்துள்ள கொமர்ஷல் வங்கி

October 29, 2018  06:25 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி அண்மையில் றிபிள் நெட்டுடன் இணைந்துள்ளது. இது றிப்பிள்ளின் புளொக் செயின் தொழில்நுட்பத்துடன் கூடிய உலகளாவிய ஒரு கொடுப்பனவு வலையமைப்பாகும். இது உள்வருகை மற்றும் வெளிச் செல்லல் ஆகிய இரு பிரிவுகளையும் ஒழுங்குபடுத்தி பணம் அனுப்பும் முறைக்கு மேலதிக தொழில்நுட்பப் பாதுகாப்பை வழங்கக் கூடியது.

றிப்பிள் நெட்டில் இணைந்துள்ளதன் மூலம் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் உடனடியாக கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்படுகின்றது. முடிவுக்கு முடிவு தேடல் மற்றும் கண்காணிப்பு என்பவும் கிடைக்கின்றன. இந்த செயற்பாடுகள் வெளிப்படையானவை. உறுதியானவை. குறைந்த வீதங்கள் அமுல் செய்யப்படுவதால், குறைந்தளவு தொகையை அனுப்புவதும் சாத்தியமாகின்றது என வங்கி அறிவித்துள்ளது.

றிப்பிள் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு மென்மையான அனுபவத்தை அளிக்கின்றது. வழமையான செயற்பாட்டில் உள்ள பல்வேறு பட்டநடைமுறைகளை மீறி நேரடியான செயற்பாட்டுக்கு வழியமைக்கின்றது. புளொக்செயின் உடனடியாக பணத்தை பரிமாறிக் கொள்ள வழியமைக்கின்றது. இது திறனாற்றல் விருத்திக்கும் வழிவிடுகின்றது.

பாரம்பரியமான பணம் அனுப்பல் முறை அங்கீகாரத்துக்கும், கொடுப்பனவை விடுவிப்பதற்கும் மூன்றாம் தரப்பொன்றை நாடிநிற்கின்றது. புளொக்செயின் இந்த மூன்றாம் தரப்பின் தேவையை நீக்குகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட கட்டமைப்பானது பணம் அனுப்பும் செயற்பாடு விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் அமைய மூல காரணங்களில் ஒன்றாக அமைகின்றது. கொடுப்பனவு தரவில் எந்தவொரு வெளிநபரின் தலையீடும் தவிர்க்கப்படுகின்றது. மோசடி தடுப்பு பண்புகளையும் அது உள்ளடக்கி உள்ளது. இதனால் கொடுப்பனவு செயற்பாடுகளில் ஊடுறுவல்காரர்களின் தலையீடு மிகவும் சிரமமாகின்றது. றிப்பிள் தொழில்நுட்பம் வங்கிகளையும் பணக் கொடுப்பனவாளர்களையும் தொடர்புபடுத்துகின்றது. உலகளாவிய ரீதியில் பணத்தை அனுப்பி வைப்பதில் வித்தியாசமான புது அனுபவத்தை இது வழங்குகின்றது.

வெளிநர்டுகளில் இருந்து பணத்தை அனுப்பும் பிரிவில் கொமர்ஷல் வங்கி மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றது. வங்கிக்கே உரித்தான அதிநவீன இணையவழி பணப்பரிமாற்ற சேவையான ஈஎக்ஸ்சேன்ஜ் உட்பட மணிகிராம், றியா, எக்ஸ்பிரஸ் மணி ரெமிட்டன்ஸ் என பல்வேறு சேவைகளை வங்கி வழங்குகின்றது. றிப்பிள் தொழில்நுட்பமானது வங்கியால் இலங்கையிலும் அது நிலை கொண்டுள்ள ஏனைய கடல் கடந்த நாடுகளிலும் பிரயோகிக்கப்பட உள்ளதால் சர்வதேச ரீதியாக பணத்தை அனுப்பி வைக்கும் அடிப்படைகளில் அது ஆக்கபுர்வமான பங்களிப்பை வழங்கவுள்ளது.

வங்கியின் பிரதான சக்திகளில் ஒன்றாக நாடு முழுவதும் உள்ள அதன் 263 கிளை வலையமைப்பு காணப்படுகின்றது. அவற்றுள் பல பொது விடுமுறை தினங்களிலும் வர்த்தக வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்துள்ளன. 782 ATM வலையமைப்பையும் வங்கி கொண்டுள்ளது. இலங்கையில் தனி ஒரு வங்கி கொண்டுள்ள மிகப் பெரிய தன்னியக்க பணப்பரிமாற்ற பொறிமுறை இதுவாகும். கொமர்ஷல் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைப்பவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்பவர்கள் 60க்கு மேற்பட்ட விடுமுறை வங்கி நிலையங்கள், சுபர்மார்க்கெட் கரும பீடங்கள், அர்ப்பணிப்புடன் கூடிய வாடிக்கையாளர் அழைப்பு சேவை, பணம் கணக்கில் வைப்பிடப்பட்டதும் அதை அறிவிக்கும் குறுந்தகவல் சேவை என பல்வேறு சேவைகளையும் நன்மைகளையும் பெறமுடியும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018 ன் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் 20 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிக பட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.