Back to Top

1000 ரூபா பெற்றுத் தருவதாக கூறியவர்கள் அமைச்சு பதவியை பெற்று கொண்டனர் -  மக்கள் ஆதங்கம்!

1000 ரூபா பெற்றுத் தருவதாக கூறியவர்கள் அமைச்சு பதவியை பெற்று கொண்டனர் - மக்கள் ஆதங்கம்!

November 1, 2018  12:54 pm

Bookmark and Share
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா பெற்றுத் தருவதாக கூறிய, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் ஆட்சி மாற்றத்தின் பிறகு அமைச்சி பதவிகளை பெற்று கொண்டனர்.

பின் மக்களை காட்டி கொடுக்க முயற்சி ஈடுபட்டு வருவதாக நோர்வூட் பகுதியில் இன்று (01) காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, அயரபி தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா வழங்க கம்பனிகாரர்கள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், பாராளுமன்ற பதவியில் இருந்து விலகி மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போராட போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்து இருந்தார்.

ஆனால் ஆட்சி மாற்றத்தின் பிறகு அமைச்சி பதவிகைள பொறுப்பேற்று கொண்ட ஆறுமுகன் தொண்டமான், வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இன்று மலையக மக்களை மறந்து செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை மஸ்கெலிய, நல்லதண்ணி வீதியை மறித்து மஸ்கெலிய பிரதேச மக்கள் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பந்தபட்டவர்கள் பெற்று கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எது எவ்வாறாக இருப்பினும் தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு கட்டாயமாக அடிப்படை சம்பளம் 1000 ரூபாவை பெற்று கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது நோர்வூட் அயரபி வீதியை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டதோடு சுமார் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)