Back to Top

கிரிக்கெட் சபை தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

கிரிக்கெட் சபை தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!

November 2, 2018  10:58 am

Bookmark and Share
அவுஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும் போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர்.

ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அவர்களுக்கு ஓராண்டு தடை வித்தது.

ஒரு பக்கம் தடை விதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது.

அப்போது டேவிட் பீவெர் 2 வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.