Back to Top

தனது பெலவத்தை கிளையை தரம் உயர்த்தியுள்ள கொமர்ஷல் வங்கி

தனது பெலவத்தை கிளையை தரம் உயர்த்தியுள்ள கொமர்ஷல் வங்கி

November 2, 2018  11:57 am

Bookmark and Share
பெலவத்தையில் உள்ள தனது சுப்பர் மார்க்கெட் வங்கிப் பிரிவை கொமர்ஷல் வங்கி வேறு இடத்துக்கு மாற்றி தரம் உயர்த்தி உள்ளது.

இந்தப் பிரதேசத்தில் முழு அளவிலான வங்கிக் கிளை ஒன்றின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய முழு அளவிலான வங்கிக் கிளை இலக்கம் 730/A,பன்னிப்பிட்டிய வீதி பெலவத்தை, பத்தரமுல்லை என்ற முகவரியில் அமைந்துள்ளது. கிழமை நாட்களில் தினசரி காலை பத்து மணி முதல் மாலை 5 மணிவரை வங்கிச் சேவைகளுக்காக திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 வரையும் திறந்திருக்கும் எனவும் வங்கி அறிவித்துள்ளது.

தன்னியக்க வங்கிச் சேவை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாரம் ஏழு நாளும் 24 மணிநேரமும் இதன் மூலம் வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இங்கு காசோலை வைப்பு இயந்திரம் ஒன்றும் உள்ளது. இணைய வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான ஒரு இயந்திரம், எந்த நேரத்திலும் பணம் பெறத்தக்கதாக ATM இயந்திரம், பண வைப்பு இயந்திரம் என்பனவும் இங்கு உண்டு.