Back to Top

கொமர்ஷல் வங்கி 20 அதிர்ஷ்டசாளிகளுக்கு சிங்கப்பூருக்கான விமான டிக்கட்டுக்களை வெல்லும் வாய்ப்பு

கொமர்ஷல் வங்கி 20 அதிர்ஷ்டசாளிகளுக்கு சிங்கப்பூருக்கான விமான டிக்கட்டுக்களை வெல்லும் வாய்ப்பு

November 2, 2018  02:14 pm

Bookmark and Share
தனது கிரடிட் கார்ட் தளத்தை அதிகரிப்பதற்கான பிரசாரத்தை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. 2018 டிசம்பர் 31க்கு முன் வங்கியிடமிருந்து கிரடிட் கார்ட்டுகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிங்கப்பூருக்கான 10 சோடி விமான டிக்கட்டுக்களை பரிசாக வழங்க வங்கி தீர்மானித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் ஏற்கனவே கார்ட் உள்ளவர்கள் புதிய இணை கார்ட் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் போது அவர்களும் இந்த பரிசை வெல்வதற்கான சீட்டிழுப்பில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக் கொள்வர் என வங்கி அறிவித்துள்ளது.

டெபிட் மற்றும் கிரடிட் கார்ட், அவற்றின் பெறுமானங்களின் கீழான விற்பனைப் புள்ளி ஆகிய பிரிவுகளில் கொமர்ஷல் வங்கியே நாட்டில் முதன்மை நிலையில் உள்ளது. அத்தோடு புதிய கார்ட்டுகளின் விநியோகமும் சந்தைப் பெறுமான விகிதங்களைப் பார்க்கிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தொழில்துறைகளில் முதற்தடவையாக பல்வேறு விதமான பிரத்தியேக தொழில்துறை கிரடிட் கார்ட்டுகளை வங்கி அறிமுகம் செய்துள்ளது. வங்கி வழங்கும் மெக்ஸ் லோயல்டி விருதானது நாட்டில் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரு பிரிவுகளுக்கும் வழங்கப்படும் ஒரேயொரு வெகுமதி திட்டமாகும். Near Field Communication (NFC) வசதி கொண்டடெப் அன்ட் கோகார்ட்டுகள் மாஸ்டர் மற்றும் விசா பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. டோக்கன் முறையிலான Mastercard Payment Gateway Services (MPGS) முறையையும் வங்கி இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

சந்தையில் சிறந்த பெறுமானம் மிக்க கார்ட்டுகளாகக் கணிக்கப்படும் கொமர்ஷல் வங்கி கார்ட்டுகள் உள்ளுர் ஹோட்டல்களில் தங்கு வசதிகள், பல்வேறு விதமான வீட்டுப் பாவனைப் பொருள் கொள்வனவு, சில்லறைக் கொள்வனவுகள், நகை கொள்வனவு, உல்லாசப் பயணம் என வருடம் முழுவதும் பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்குகின்றன. இவை குறிப்பிட்ட ஒரு சில தினங்களுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு பருவ காலத்திலும் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்கு வழங்கப்படுகின்றன.

பிரபலமான சுப்பர் மார்க்கெட்டுக்களிலும் கொமர்ஷல் வங்கி கார்ட்டுகள் மூலம் காலத்துக்கு காலம் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சில்வர், தங்கம், பிளெட்டினம் ஆகிய வகைகளில் விஸா, மாஸ்டர்கார்ட், விசா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட், விசா இன்பினிட் ஆகிய பிரிவுகளில் பல்வேறு விதமான கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. அதன் 263 கிளைகளையும் 796 ATM இயந்திரங்களையும் கொண்ட வலையமைப்பு மற்றும் அவற்றின் EMV பாதுகாப்பு என்பன கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மேலதிக பாதுகாப்பாகவும் அனுகூலமாகவும் அமைகின்றது.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018 ன் முதல் எட்டு மாதகாலத்தில் மட்டும் 20 சர்வதேச விருதுகளையும் உள்ளுர் விருதுகளையும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.