Back to Top

தீபாவளி முற்பணம் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்

தீபாவளி முற்பணம் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்

November 2, 2018  02:27 pm

Bookmark and Share
அக்கரப்பத்தனை நியூ பிரஸ்டன் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும், தீபாவளி முற்பணம் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இன்று (02) கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 200 தோட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறும், 1000 ரூபா சம்பள உயர்வையும் காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல்வாதிகள் பெற்று தரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக கூறிய பொய்யான வார்த்தைகளை இனிமேலும் நாங்கள் நம்பபோவதில்லை என தெரிவித்ததோடு, சம்பள அதிகரிப்பினை பெற்றுகொடுக்காவிட்டால் நல்ல பாடம் புகட்டுவதாகவும் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினையும் உடனடியாக நிறுத்துவோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)