Back to Top

ராஜிதவிற்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜிதவிற்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

November 2, 2018  03:41 pm

Bookmark and Share
சுகாதார அமைச்சை மீண்டும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வழங்க கூடாதென நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (02) மதியம் 1 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட சங்கத்தின் செயலாளர் நியால் திசாநாயக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் புதிய சுகாதார அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மீண்டும் ராஜித சேனாரத்ன புதிய அரசில் இணைந்து சுகாதார அமைச்சை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எனவே ராஜித சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டாம் என புதிய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)