Back to Top

இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் தனது நீண்டகால தோழியை கரம் பிடித்தார்

இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் தனது நீண்டகால தோழியை கரம் பிடித்தார்

November 4, 2018  05:45 pm

Bookmark and Share
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவரான 32 வயதுடைய மோர்கன் தனது நீண்டகால தோழியான தாரா ரிட்ஜ்வே-யை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருமணம் செய்து கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மோர்கனின் திருமணத்தில் ஜேசன் ராய், அலஸ்டைர் குக், ஸ்டீவ் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து ஒருநாள் அணி இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 3-1 எனத் தொடரை கைப்பற்றியது. 4 போட்டியில் 195 ஓட்டங்கள் குவித்த மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.