Back to Top

மண்மேட்டில் மோதி ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 3 பேர் வைத்தியசாலையில்

மண்மேட்டில் மோதி ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 3 பேர் வைத்தியசாலையில்

November 5, 2018  08:35 am

Bookmark and Share
கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயனித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து பொகவந்தலாவ இரானிகாடு தோட்ட பகுதியை நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டெதன் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஜீப் வண்டியில் பயனித்த 3 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (05) விடியற்காலை 5.15 மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஜீப் வண்டி ஹட்டன் செனன் ஸ்டெதன் பகுதியில் உள்ள மண்மேடு ஒன்றில் மோதி ஹட்டன் கொழும்பு பிராதான வீதியில் தடம் புரண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக ஜீப் வண்டிக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜீப் வண்டியினை செலுத்திய சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டுள்ளமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான 3 பேரும் தொடர்ந்தும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)