Back to Top

ஜோகோவிச்சை வீழ்த்தினார் கரேன்!

ஜோகோவிச்சை வீழ்த்தினார் கரேன்!

November 5, 2018  11:01 am

Bookmark and Share
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 2 ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், தரநிலைப் பெறாத ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

கச்சனோவ் அரையிறுதியில் 6 ஆம் நிலை வீரரான தியேம்மையும், காலிறுதியில் 4 ஆம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரேவையும் வீழ்த்தியிருந்தார். ஜோகோவிச் அரையிறுதியில் 3 ஆம் நிலை வீரரான பெடரரையும், காலிறுதியில் 5 ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சையும் வீழ்த்தியிருந்தார்.

தரநிலை பெறாத வீரர் என்பதால் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கசச்சனோவ் விளையாடினார்.

முதல் செட்டை 7-5 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக மாஸ்டர்ஸ் டைட்டிலை கைப்பற்றியுள்ளார்.