Back to Top

வயோதிப பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

வயோதிப பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

November 5, 2018  02:50 pm

Bookmark and Share
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேணியடி பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கேணியடி 1 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த யோகராசா யோகாம்பிகை எனும் 68 வயதுடைய வயோதிப பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இறந்தவரின் மகளான யோகராசா ரத்னகுமாரி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்கைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அயல் வீட்டைச் சேர்ந்த ஜெயபிரதீபா, கடந்த மூன்று நாட்களாக இவர்களின் பாதுகாப்பிற்காக தங்கி வந்தவர் எனவும் சம்பவம் நடக்கும் போது ஜெயபிரதாவும் அவரின் மகனான நிஷாந்தன் என்பவரும் அப்பிரசேத்தை விட்டு தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தப்பியோடியவர்களை தேடும் பணியை தலைமையக பொலிஸார் முடக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(திருகோணமலை நிருபர் கீத்)