Back to Top

உலகின் முதலாவது 7nm chipset உடன் HUAWEI அறிமுகப்படுத்தியுள்ள Mate 20 உற்பத்தி வரிசை

உலகின் முதலாவது 7nm chipset உடன் HUAWEI அறிமுகப்படுத்தியுள்ள Mate 20 உற்பத்தி வரிசை

November 5, 2018  03:53 pm

Bookmark and Share
Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், ´எதிலும் முற்போக்காக செயற்படுகின்ற வழக்கத்திற்கு அமைவாக, nova3 உற்பத்தி வரிசை அறிமுகம் செய்யப்பட்டு, ஒரு சில மாதங்களுக்குள், 7nm தொழிற்பாட்டில் கட்டமைக்கப்பட்ட உயர் பெறுபேற்றுத்திறன் கொண்ட மொபைல் AI chipset ஆன Kirin 980 கொண்ட Mate 20 உற்பத்தி வரிசையை HUAWEI அண்மையில் லண்டனில் அறிமுகம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் முதலாவது இரட்டை NPU வடிவமைப்பாக மாறியுள்ள இந்த chipset, LTE Cat.21 தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கம் கொண்ட உலகின் முதலாவது chip ஆகவும் மாறியுள்ளதுடன், வியத்தகு மொபைல் அனுபவத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது. Huawei Mate 20 உற்பத்தி வரிசையானது ஏற்கனவே சர்வதேச சந்தையை ஈர்த்துள்ளதுடன், அதன் மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறன், செயல்திறன் மற்றும் இணைப்புத்திறன் சிறப்பம்சங்களுடன் Mate 20 உற்பத்தி வரிசை இலங்கை மக்களுக்கும் வியப்பான அனுபவத்தைத் தரும் என நம்புகின்றோம்,´ என்று குறிப்பிட்டார்.

Kirin 980 இற்கு 7nm தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளமையால், chipset இன் தொழிற்பாட்டுத்திறன் ஆனது 10nm chipset உடன் ஒப்பிடுகையில், அண்ணளவாக 20 சதவீதம் மேம்பட்ட processor வேகத்தைத் தருவதுடன், அண்ணளவாக 40 சதவீதம் குறைந்த அளவிலான மின்வலுவையே நுகர்கின்றது. வேகமான மாற்றீட்டு டிரான்சிஸ்டர்களின் உந்துதலுடன், chipset இன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், டிரான்சிஸ்டர்களை மாற்றீடு செய்வதற்கு குறைந்த அளவிலான தடை மற்றும் குறைந்த அளவிலான மின்வலு தேவைப்பாடு காரணமாக மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் மின்வலு திறனையும் வழங்குகின்றது.

denser chip வழங்கும் பல்வேறு நன்மைகளுக்கு மேலதிகமாக, chip ஆனது குறைந்தளவு மின்வலுவை உற்பத்தி செய்கின்றமையால், சாதனத்திலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற வெப்பத்தின் அளவும் குறைக்கப்படுகின்றது. இதற்குப் பதிலாக, சிறு அளவிலான chip ஆனது AI processorகள், ISP க்கள் மற்றும் DSP க்கள் மற்றும் பல கவர்ச்சியான அம்சங்கள் போன்ற மேலும் வியப்பூட்டும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை உள்ளிணைப்புச் செய்வதற்கு வடிவமைப்பாளர்களுக்கு இடமளிக்கின்றது. ஆகவே அதிநவீன 7nm Chipset இன் அறிமுகமானது மேம்பட்ட மற்றும் வியப்பூட்டும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன், வினைதிறன், மின்வலு சேமிப்பு மற்றும் சீரான அனுபவத்தை உள்ளிணைக்கும் வழிமுறைகளை பாவனையாளர்களுக்கு வழங்க வடிவமைப்பாளர்களுக்கு இடமளித்துள்ளது.

இவற்றை விட, Kirin 980 ஆனது 1 சதுர சென்டிமீட்டருக்கும் குறைந்த அளவு இடப்பரப்பில் 6.9 பில்லியன் டிரான்சிஸ்டர்களை உள்ளிணைப்புச் செய்வதால் சிறப்பான தொழிற்பாட்டுத்திறனுக்கு வலுவூட்டுகின்ற அடர்த்தியில் இது 1.6 மடங்கு அதிகரிப்பாகும். Kirin 980 ஆனது உலகின் முதலாவது வர்த்தகப்பாவனை GPU Mali-G76 MP10 இனை உள்ளடக்கியுள்ளதுடன், 46% மேம்பட்ட தொழிற்பாட்டுத்திறனையும் வழங்குகின்றது. LPDDR4X memory ஆனது 2133 MHz வரையான வேகங்களில் தொழிற்படுகின்றது. நான்காவது தலைமுறை ISP ஆனது தரமான படங்களை வசப்படுத்தி, முக்கியமான தகவல் விபரங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு இரைச்சலை குறைக்கும் (multi-pass noise reduction) தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றது. வீடியோவின் தெளிவை திறன்மிக்க முறையில் மேம்படுத்தி, வீடியோக்களை பதிவுசெய்யும் நேரத்தில் ஏற்படும் தாமதங்களை 33% இனால் குறைக்கின்ற வகையில் பிரத்தியேகமான வீடியோ pipeline ஒன்றையும் இந்த ISP கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை Huawei ஏற்றுமதி செய்துள்ளதுடன், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் வலுவாக 2 ஆவது ஸ்தானத்தில் நிலைபெற்றுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், GfK அறிக்கைகளின் பிரகாரம், ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலாவது ஸ்தானத்தை HUAWEI தனதாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நுகர்வோர் மத்தியில் மிகவும் விரும்பப்படுகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக மாறியுள்ள HUAWEI கவர்ச்சியான விலைகளில் மிகச் சிறந்த தரம் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடனான ஸ்மார்ட்போன்களை வழங்கி, அனைத்து நுகர்வோரினதும் வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.