Back to Top

 மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி!

மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி!

November 7, 2018  09:13 am

Bookmark and Share
இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் இரண்டாவதுநாள் நாய்களுக்கான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ´குக்குர் திஹார்´ (நாய் பண்டிகை) என்ற பெயரில் இன்று அங்கு நடைபெற்றுவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் தங்கள்மீது ஆயுள்வரை நன்றி பாராட்டும் வளர்ப்பு நாய்களுக்கு மக்கள் மாலை சூட்டி, திலகமிட்டு, தீப ஆராதணை காட்டி நன்றி பாராட்டி மகிழ்கின்றனர்.