Back to Top

கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

November 7, 2018  12:31 pm

Bookmark and Share
நோட்டன் பிரீஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தெபட்டன் தோட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (06) மாலை 03 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் இருந்த ஒருவரும், கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்த நபரும் மது அருந்தி கொண்டிருந்த வேலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சன்முகம் விஸ்வநாதன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நோட்டன் பிரீஜ் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானால் இடம்பெறவுள்ளதுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)