Back to Top

ஆசியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக ஜெகன் துரைரட்ணம் தெரிவு

ஆசியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக ஜெகன் துரைரட்ணம் தெரிவு

November 8, 2018  01:45 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் 2018ம் ஆண்டின் Asia Corporate Excellence & Sustainability (ACES) ஆசிய கூட்டாண்மை சிறப்பு மற்றும் நிலைபேறு விருது வழங்கும் விழாவில் ஆசியாவின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

துரைரட்ணம் கொமர்ஷல் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பின் சிங்கப்பூரில் கடந்தமாதம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கொமர்ஷல் வங்கி பல பிரிவுகளில் சிறப்பு நிலையை அடைவதற்காக அவர் கடந்த காலங்களில் வழங்கிய தலைமைத்துவத்துக்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.