Back to Top

பாடசாலையில் வௌ்ளநீர் புகுந்ததால் கற்றல் நடவடிக்கைக்கு பாதிப்பு

பாடசாலையில் வௌ்ளநீர் புகுந்ததால் கற்றல் நடவடிக்கைக்கு பாதிப்பு

November 8, 2018  03:17 pm

Bookmark and Share
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் இன்று (08) பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கடும் அடை மழை காரணமாக பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதால் தளபாடங்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற கால நிலை காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன் மாணவர்களின் வரவும் இன்றைய தினம் குறைவடைந்துள்ளதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ள நீர் வகுப்பறைக்குள் உட்புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டும் வெளியேறியுள்ளனர்.

கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வித சிரமமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்குமாறு பெற்றோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் கீத்