Back to Top

கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

November 9, 2018  09:23 am

Bookmark and Share
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.