Back to Top

தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

November 9, 2018  03:41 pm

Bookmark and Share
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்துகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தீயினால் எரிந்து உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின்படி 76 வயதுடைய பெண் ஒருவரே இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான மரண பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.