Back to Top

சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்

சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்திற்கு விராட் கோலி விளக்கம்

November 9, 2018  04:39 pm

Bookmark and Share
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் துடுப்பாட்டத்தை விட, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டம் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதைவிட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி விராட் கோலியை ட்ரோல் செய்தனர். இந்த விவகாரம் பிசிசிஐ வரை சென்று, பிசிசிஐ பொருளாளர் விராட் கோலிக்கு எதிராக கருத்தையும் பதிவு செய்தார். பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு விராட் கோலியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

Most Viewed