Back to Top

ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

November 9, 2018  07:30 pm

Bookmark and Share
ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

உதய கம்மன்பில - புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்

சீ.பி. ரத்னாயக்க - தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன - பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்

மேற்படி அமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை பின்வரும் அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

காமினி லொக்குகே – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலி வள அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்