Back to Top

ரூபாயின் பெறுமதியை பலப்படுத்த நடவடிக்கை

ரூபாயின் பெறுமதியை பலப்படுத்த நடவடிக்கை

November 9, 2018  11:43 pm

Bookmark and Share
ரூபாயின் பெறுமதியை பலப்படுத்தும் நோக்கில் உள்ளுர் செயற்றிட்டங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்று சர்வதே வர்த்தக மற்றும் முதவீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் அரசியல் அமைப்பின் வரிக் கொள்கை தொடாபில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கத்தின் நிதி அமைச்சு பல சலுகைகளை வழங்கதிட்டமிட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதியை பலப்படுத்தும் நோக்கில் உள்ளுர் செயற்றிட்டங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேசிய சொத்துக்கள் மற்றும் பொருளாதார கொள்கைதொடர்பான விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.