Back to Top

சில பிரதேசங்களுக்கு மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு

சில பிரதேசங்களுக்கு மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு

November 10, 2018  09:45 am

Bookmark and Share
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

தெஹிவளை - கல்கிஸ்ஸ, இரத்மலானை, சொய்சாபுர, கொழும்பு 06, முல்லேரியாவ மற்றும் பெலவத்தை ஆகிய பிரதேசங்களில் இன்று மாலை 04.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த காலப் பகுதியில்அதேநேரம் கொழும்பு 04 மற்றும் 05 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது