Back to Top

வௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது

வௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கைது

November 10, 2018  11:57 am

Bookmark and Share
ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களை கடத்தி வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 205 பொதிகளில் அடைக்கப்பட்ட 41,000 வௌிநாட்டு சிகரட் பக்கட்டுக்களை கடத்தி வந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி 2,050,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் வருகை தந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Most Viewed