Back to Top

காபந்து அரசாங்கம் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு

காபந்து அரசாங்கம் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு

November 10, 2018  05:08 pm

Bookmark and Share
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் செயல்பட்ட போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர் மகா நாடு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நீண்டநாட்களாக தீர்வு காணப்படாத நிலையிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இன்றைய சூழ்நிலையில் தீர்வு காணப்படுமா என்று கேட்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தோட்டங்களை நிருவகிக்கும் தோட்ட கம்பனிகளின் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்கு உட்பட்டது.

இருந்த போதிலும் இதற்கு தீர்வு காண்பதற்கான பங்களிப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது.

விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்.

அரச தகவல் திணைக்களம்

Most Viewed