Back to Top

மீன்பிடிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவனை காணவில்லை

மீன்பிடிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவனை காணவில்லை

November 10, 2018  07:04 pm

Bookmark and Share
திரு​கோணமலை கிண்ணிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா பாலத்துக்கு கீழ் மீன் பிடிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

03 மாணவர்கள் இணை்நது மீன் பிடிக்க சென்றுள்ளதுடன், அதில் 19 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்த செருப்பை எடுக்க சென்ற மாணவன் நீந்தி கரையை கடக்க முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன், கிண்ணியா 01 பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை நிரூபர் கீத்

Most Viewed