Back to Top

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி

November 28, 2018  01:22 pm

Bookmark and Share
பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை குறித்த பேரணி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மஹிந்த வேண்டும், ரணிலே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியவாறு இப் பேரணி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள்ளிட்ட பலர் இப் பேரணியில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இப் பேரணில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)