Back to Top

ஆயுதங்களுடன் மூவர் கைது

ஆயுதங்களுடன் மூவர் கைது

December 2, 2018  06:15 pm

Bookmark and Share
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று இளைஞர்களை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸார் இன்று (02) கைது செய்துள்ளதுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொக்குவில் மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே அவர்களது வீட்டில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டமையால், சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸார் மூவரையும் நாளை (03) மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)