Back to Top

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

December 4, 2018  02:12 pm

Bookmark and Share
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1000 ரூபாவினை வலியுறுத்தி மலையகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பொகவந்தலாவ பகுதியில் உள்ள 12 தோட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்ட பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த போதிலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பை புறகணித்துள்ளதோடு தொழில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட தொழிற்சாலை முன்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களால் பறிக்கபடும் தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்குள் தோட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தேயிலை தொழிற்சாலையின் முன்பு எதிர்ப்பினை வெளிபடுத்திய போது தோட்ட நிர்வாகத்தால் பலத்த பொலிஸ் பாதுகாப்புபோடு தொழிற்சாலையின் பிரதான கதவு முடப்பட்டது.

இதேவேளை தாங்கள் பறிக்கும் கொழுந்தினை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கபட வேண்டும் என கூறி தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் எதிர்பினை வெளியிட தொழிற்சாலையின் கதவு மீண்டும் திறக்கப்பட்டது.

இதேவேளை, தேயிலை தொழிற்சாலையின் முன்பு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றவுடன் தேயிலை தொழிற்சாலையின் வீதியினை மறித்து வைக்கபட்டிருந்த பெரல் மற்றும் கற்கள் ஆகியவற்றை பொலிஸாரின் பாதுகாப்போடு தோட்ட நிர்வாக உதவி முகாமையாளரால் அகற்றபட்டு, தொடர்ந்தும் தேயிலை தொழிற்சாலையின் நடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)