Back to Top

 புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

December 5, 2018  10:31 am

Bookmark and Share
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மட்டக்களப்பு கூளாவடி பிரதேச தண்டவாளத்தில் ஆண் ஒருவர் மோதுன்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகையிரதம் வழமை போன்று கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு இன்று அதிகாலை 4.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

இதன் போது மட்டக்களப்பு, கூளாவடி பிரதேச தண்டவாளத்தில் வைத்தே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத சாரதி எடுத்து கொண்டுவந்து புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.