Back to Top

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் - யாழில் ஆர்ப்பாட்டம்

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் - யாழில் ஆர்ப்பாட்டம்

December 5, 2018  11:30 am

Bookmark and Share
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரியும் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (05) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணி அளவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினாலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே மக்களின் பாதுகாப்பிற்காக, இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோசம் முன்வைக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்திற்கு பின்புலமாக சிவில் உடை தரித்த இராணுவம் மற்றும் பொலிஸார் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் பிரதீபன்)