Back to Top

HUTCH முகவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6 ஆவது ஆண்டாகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது

HUTCH முகவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6 ஆவது ஆண்டாகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது

December 6, 2018  11:21 am

Bookmark and Share
மொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்குவதில் இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிறுவனமான HUTCH, தனது முகவர்களுக்கு இடையில் ஏற்பாடு செய்து வருகின்ற வருடாந்த கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து 6 ஆவது தடவையாகவும் நுவரெலியா குதிரைத்திடல் மைதானத்தில் அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் HUTCH முகவர் நிலையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 40 அணிகள் முகவர்களுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டு வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிக் கொள்ள போட்டியிட்டிருந்தனர். தமது அபார திறமைகளை வெளிக்காட்டி கம்பஹா Unitel அணி வெற்றிக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது. கிரிக்கெட் போட்டியினை காண்பதற்கு HUTCH குடும்பத்தைச் சேர்ந்த பெருந்தொகையான அங்கத்தவர்கள் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

HUTCH முகவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஒற்றுமையையும், வினைதிறனையும் ஊக்குவிக்கும் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. நாடெங்கிலும் HUTCH நிறுவனத்தின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற முகவர்கள் மற்றும் அவர்களுடைய பணியாளர்களை ஒன்றுதிரட்டி, HUTCH வர்த்தகநாமத்தின் மீது அவர்கள் காண்பிக்கும் தீவிரமான அர்ப்பணிப்பைக் கொண்டாடி, விநோதமாகவும், களிப்புடனும் அவர்கள் ஒரு நாளைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. விஸ்தரிப்படைந்து வருகின்ற தனது முகவர் வலையமையப்பிற்காக வருடம் முழுவதும் HUTCH ஏற்பாடு செய்து வருகின்ற பல்வேறு செயற்பாடுகளில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

HUTCH Sri Lanka நிறுவனத்தின் விற்பனைத் துறை பொது முகாமையாளரான மனோஜ் குமார் மோசஸ் அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ´நாடெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர் தளத்தை நாம் எட்டுவதற்கு எமக்கு உதவுவதில் எமது முகவர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அவர்களுடைய கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றையே இது போன்ற நிகழ்வுகளின் மூலமாக நாம் கொண்டாடி வருகின்றோம். கிரிக்கெட் விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கும் இணைப்புப்பாலமாக இலங்கைக் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், நாடெங்கிலுமிருந்து பெறுமதிமிக்க எமது முகவர் தளத்தை ஒன்று திரட்டுகின்ற இந்த வகையிலான நிகழ்வை ஏற்பாடு செய்கின்றமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இச்சிநேகபூர்வ போட்டியில் மிகவும் திறமையாக விளையாடி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். HUTCH நிறுவனம் விளையாட்டுச் செயற்பாடுகளை எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளதுடன், வளர்ச்சிப்போக்குடன் விறுவிறுப்பான ஒரு காலகட்டத்தில் நாம் காலடியெடுத்து வைக்கின்ற இத்தருணத்தில் எமது மக்களின் திறமைகளை ஊக்குவித்து, அவற்றை வெளிக்கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்தும் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்,´ என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் மொபைல் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Hutchison Telecommunications Lanka (Private) Limited, “HUTCH” என்ற வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் அதன் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுபடியாகும் வகையில், நவீன 3G மற்றும் 4G மொபைல் புரோட்பான்ட் தீர்வுகளையும் வழங்கி வருகின்றது. 4G மொபைல் புரோட்பான்ட் தீர்வுகள் தற்சமயம் மேல் மாகாணத்தில் கிடைக்கப் பெறுவதுடன், இது வெகு விரைவில் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

Hutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited ஆகிய நிறுவனங்கள் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை www.ckh.com.hk/en/global/homephp மற்றும் www.hutch.lk ஆகிய இணையத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.