Back to Top

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa அலகுக்கு இரு விருதுகள்

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa அலகுக்கு இரு விருதுகள்

December 6, 2018  12:20 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவு இரு விருதுகளை சுவீகரித்துள்ளது. IFFSA – 2018 (Islamic Finance Forum of South Asia) நிகழ்வில் இந்த விருதுகளை சுவீகரித்திருந்தது.

இந்நிகழ்வு தெற்காசிய பிராந்தியத்தில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறையைச் சேர்ந்த சிறப்பாக செயலாற்றும் நபர்களை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிகழ்வு மூன்றாவது தடவையாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al-Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவு ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கான தங்க விருது மற்றும் ஆண்டின் சிறந்த இஸ்லாமிய நிதியியல் தீர்வுக்கான வெண்கல விருது ஆகியவற்றை சுவீகரித்திருந்தது. IFFSA விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய நிதிசார் சேவைகளை வழங்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் சிறப்பாக செயலாற்றியிருந்த நபர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவின் பிரதம முகாமையாளர் மொஹைதீன் மஹரூவ் இந்த இரு விருதுகளை சுவீகரித்தமை தொடர்பாக குறிப்பிடுகையில், இந்த IFFSA– 2018 நிகழ்வில் பீப்பளஸ் லீசிங் நிறுவனம் இரு விருதுகளை சுவீகரித்தமையானது, இஸ்லாமிய நிதியியல் சேவைகளை வழங்கும் பிரிவில் சிறப்பாக செயலாற்றுகின்றமையை உறுதி செய்துள்ளது என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “IFFSA விருதுகள் தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த இஸ்லாமிய நிதிசார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. Al-Safa நிதியியல் பிரிவின் செயற்பாடுகளை பீப்பள்ஸ் லீசிங் 2005 இல் ஆரம்பித்திருந்தது. ஷரிஆ கொள்கைகளின் பிரகாரம் எமது நிதியியல் சேவைகளை நாம் முன்னெடுப்பதுடன், ஷரிஆ கண்காணிப்பு பிரிவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தற்போது பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தனது எட்டு Al-Safa அலகுகளினூடாக இஸ்லாமிய நிதியியல் சேவைகளை வழங்குகிறது. மேலும், நாடளாவிய ரீதியில் காணப்படும் எந்தவொரு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிளையிலிருந்தும் பரந்தளவு இஸ்லாமிய நிதியியல் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்´ என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காகரூபவ் Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.