
அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!
December 6, 2018 12:49 pm
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.