Back to Top

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

December 8, 2018  10:14 am

Bookmark and Share
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த மூன்று நபர்கள் களனி, பேலியகொட மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி தொரணஹந்தி பிரதேசத்தில் வைத்து 500 கிராமும் 504 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி, வனவாசல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர பேலியகொட, முருகன்வத்தை பிரதேசத்தில் வைத்து 62 கிராமும் 807 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 02 கிராமும் 300 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 50 வயதுடைய ஒருவர் பாணந்துறை பரத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.