Back to Top

கோப்பாய் பிரதேசத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

கோப்பாய் பிரதேசத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

December 8, 2018  02:14 pm

Bookmark and Share
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஹயேஸ் வாகனம் ஒன்றும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளன.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது, இனந்தெரியாத கும்பல் நேற்றிரவு நடத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமுற்ற 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் யாழ். நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர்கள் சுமித்தி/பிரதீபன்)