Back to Top

சிலாபம் - ஆனமடுவ தனியார் பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

சிலாபம் - ஆனமடுவ தனியார் பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2018  03:56 pm

Bookmark and Share
சிலாபம் - ஆனமடுவ வீதியல் ஓடும் தனியார் பஸ் பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் பஸ் நிலையத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் நேரப் பதிவாளர் ஒருவரால் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்கள் பணி நிறுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான பஸ் பணியாளர் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை தன் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்து நேரப் பதிவாளரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.