Back to Top

சிவனொளிபாத யாத்திரை 22ம் திகதி ஆரம்பம்

சிவனொளிபாத யாத்திரை 22ம் திகதி ஆரம்பம்

December 8, 2018  10:45 pm

Bookmark and Share
புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நோன்மதி தினத்தில் ஆரம்பமாகவுள்ள புனித யாத்திரையை முன்னிட்டு பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில் மத வழியாடு இடம்பெறவுள்ளது.

21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாத மலையில் மற்றுமொரு வழிபாட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதற்கமைவாக புனித சிவனொளிபாத மலை வரையிலான மூன்று பெரஹரா நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

புனித சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாவதை முன்னிட்டு அரச அதிகாரிகள் மற்றும் மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் இந்த விடயங்கன் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

அரச தகவல் திணைக்களம்