Back to Top

68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு

68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு

December 9, 2018  08:42 am

Bookmark and Share
சீனாவின் சான்யா நகரில் 68 ஆவது உலக அழகி பட்டத்திற்கான போட்டி நேற்று (08) நடைபெற்றது.

இதில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் 2018 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனேசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.

வனேசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்து தற்போது மாடலாகவும் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமைளில ஈடுபட்டு வருகிறார்.