Back to Top

யாழ். நீதிமன்றத்திற்கு அருகில் வெடிபொருட்கள்

யாழ். நீதிமன்றத்திற்கு அருகில் வெடிபொருட்கள்

January 2, 2019  10:55 am

Bookmark and Share
யாழ்.சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து சி4 வெடிமருந்து 1 கிலோ மற்றும் டெனேட்டர் 4 விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (01) இரவு யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்தே விசேட அதிரடிப் படையினர் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர்.

1 கிலோ நிறையுடைய சி4 வெடிமருந்து 7 ​பெக்கட்களாக பொதி செய்யப்பட்ட நிலையிலும், டெனேட்டர் என அழைக்கப்படும் வெடி மருந்திற்குப் பயன்படுத்தப்படும் 4 குழாய்களும் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் வைத்திருக்கலாம் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் இவ்வாறு இந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் சுமித்தி)