Back to Top

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

January 5, 2019  03:51 pm

Bookmark and Share
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 2ம் வட்டார பிரதேசத்தில் நேற்று மாலை போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 வயது வாலிபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 2 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிண்ணியா 1ம் வட்டாரப் பிரதேசத்தில் போதைப்பபொருள் வியாபாரியின் மனைவியிடம் (வயது 38) சோதனை மேற்கொண்டபோது அவரின் மார்புக்கச்சையில் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்களையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)