Back to Top

அக்கரபத்தனை வனபகுதியில் பாரிய தீ

அக்கரபத்தனை வனபகுதியில் பாரிய தீ

January 6, 2019  04:24 pm

Bookmark and Share
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபத்தனை வனபகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீயினால் அக்கரபத்தனை வனபகுதியின் ஒரு தொகுதி எரிந்து கருகி உள்ளதாகவும் தீயினை காட்டு பாட்டுக்குள் கொண்டு வர அக்கரபத்தனை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ வைக்கபட்ட சந்தேக நபர் குறித்து அக்கரபத்தனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)