Back to Top

வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த 7 அடி நீளமான விருந்தாளி

வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த 7 அடி நீளமான விருந்தாளி

January 9, 2019  12:42 pm

Bookmark and Share
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தினுள் நுழைந்த முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது.

குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில், முதலை காட்டில் இருந்து ஆடு, நாய் மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

(மன்னார் நிருபர் லெம்பட்)

Most Viewed