Back to Top

2019 ஆம் ஆண்டில் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் மொபிடெல் கேஷ் பொனான்ஸா

2019 ஆம் ஆண்டில் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் மொபிடெல் கேஷ் பொனான்ஸா

January 9, 2019  03:36 pm

Bookmark and Share
மொபிடெல் கேஷ் பொனான்ஸா அதிர்ஷ்ட செயற்திட்டத்தின் மூலம் 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட மொபிடெல் கேஷ் பொனான்ஸா பிரச்சரம் அனைவரும் வெற்றியாளராகிட முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான பரிசுகள் மற்றும் ஆச்சரியங்களுடன் பல வெகுமானங்களையும் தந்துள்ளது. இலங்கையில் இன்றுவரை வருடம் முழுவதும் 2,172,299 வாடிக்கையாளர்களுக்கு Mercedez Benz கார்களையும் பணப்பரிசுகளையும் வழங்கியுள்ளது.

உண்மையில் மொபிடெல் கேஷ் பொனான்ஸா மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்;ட ஓர் நிகழ்வாகும். அனைத்து வயதினருக்கும் குடும்பம் சகிதம் மற்றும் தங்கள் நண்பர்கள் சகிதம் கலந்து கொள்ளளும் வகையில் ஒவ்வொரு மாதமும் புதிய நகரத்தில் மகிழ்ச்சி நிறைந்த களியாட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்படுவதால் மக்களால் இது பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஓர் நிகழ்வாகும். மொபிடெல் கேஷ் பொனான்ஸா முழு தேசத்தினதும் நிகழ்வாக இப்பொழுது கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான மொபிடெல் கேஷ் பொனான்ஸா வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய Mercedez Benz கார்களையும் பல ரொக்கப்பரிசுகளையும் வென்றிட சந்தர்ப்பம் வழங்குகிறது. இப்பரிசுகளும் மிகவும் புகழ் பெற்ற கேஷ்பொனான்ஸா களியாட்ட நிகழ்ச்சியில் வைத்தே வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ளகூடிய இந்நிகழ்வு மிகவும் இன்பமயமான சூழலில் பல விளையாட்டுக்களுடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். அனைத்து இனங்கள், பால், வயது என அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய இந்நிகழ்வு, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நகரத்திலும் நடைபெறுவதால் வாழ்க்கையில் நல்லதோர் அனுபவத்தினை வழங்கிடும். சிறுவர்களுக்கும் இந்நிகழ்வில் ஆடல். பாடல், விளையாட்டுக்களில் பங்கேற்றல் என பல பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கும். அத்தோடு இளைஞர்களுக்கு புத்தம்புதிய தொழில்நுட்ம் சார்ந்த கலந்துரையாடல்கள், IoT (Internet of Things) பயிற்சி அமர்வுகளையும் கொண்டிருக்கும்.

மேலும் சிறந்த இசைக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் மகழ்ச்சிகரமான இசை நிகழ்ச்சிகளையும் இது கொண்டிருக்கும். இலங்கையின் மூத்த குடிமக்களுக்கும் இதில் கலந்து கொள்வதற்காக சிறப்பு ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் மூத்த குடிமக்களுக்கு சிறந்த சுகாதார நிபுணர்களால் இரத்த சக்கரை, இரத்த அழுத்த அளவுகளை பரிசேதானை செய்து கொள்ளவும் கண்பார்வை பரிசோதனையும் செய்து கொள்ள முடியும். வாழ்க்கையை கொண்டாடச் செய்திடும் பரிசுகளையும் வெகுமானங்களையும் தந்திடும் மொபிடெல் கேஷ் பொனான்ஸா இவ்வாண்டில் அனைத்து இலங்கையர்களும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் ஓர் நிகழ்வாகும்.

கேஷ் பொனான்ஸா என்பது மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ்ஃ பில்கள் கொடுப்பனவு சலுகைத்திட்டம் ஆகும். மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ப்ரோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் இம்மொபிடெல் கேஷ் பொனான்ஸாவுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஒவ்வொரு ரூ. 50 பெறுமதியான முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். கேஷ் பொனான்ஸா வெற்றியாளர்கள், வாடிக்கையாளர் சேவை 071 27 55 777 எனும் இலக்கத்தினூடாகவும் அஞ்சல் வழியாகவும் மற்றும் எழுத்து மூலமாகவும் அறிவிக்கப்படுவர். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வெற்றி பெற்ற எந்த பரிசுகளுக்கும் கூடுதல் கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.