Back to Top

SLIM DigisAwards 2018 விருதுகள் நிகழ்வு தொடர்பில் Sri Lanka Institute of Marketing அறிவிப்பு

SLIM DigisAwards 2018 விருதுகள் நிகழ்வு தொடர்பில் Sri Lanka Institute of Marketing அறிவிப்பு

January 9, 2019  04:15 pm

Bookmark and Share
SLIM Digis 2018 என்றபெயரில் முதன்முறையாக இடம்பெறவுள்ள டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வு தொடர்பில் Sri Lanka Institute of Marketing அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மிகச் சிறந்த செயல்பாடு, புத்தாக்கம் மற்றும் திறமை ஆகியவற்றைக் கொண்டாடுவதும், பூகோளவியல் டிஜிட்டல் தொழிற்துறையில் வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்திய ஆதிக்கத்திற்கு உரிய இனங்காணல் அங்கீகாரமும் வழங்குவதுமே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

1970 ஆம் ஆண்டு SLIM ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையில் அந்தஸ்தை மேம்படுத்தி, சந்தைப்படுத்தல் மேன்மையை ஊக்குவிக்கும் முயற்சிகளை அது முன்னெடுத்து வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்ட மூலத்தின் ஊடாக SLIM ஆனது பதிவு பெற்ற ஒரு நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மேலும், SLIM Nielsen Peoples Awards, Brands Excellence, NASCO மற்றும் Effie awards போன்ற, இலங்கையில் மிகவும் போற்றப்படுகின்ற மற்றும் நன்மதிப்புப் பெற்ற விருதுகள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்ற மற்றும் பிரதான அனுசரணையாளராகவும் SLIM திகழ்ந்து வருகின்றது.

இடம்பெறவுள்ள இந்த முக்கியமான நிகழ்வு தொடர்பில் விளக்கிய SLIM இன் தலைவரான பிரதீப் எட்வேர்ட் அவர்கள்,´இலங்கையில் சந்தைப்படுத்தல் துறையில் முன்னணி வகிக்கும் கற்கை நிலையம் என்ற வகையில், போட்டித்திறன், இலாபத்திறன், நிலைபேற்றியல் கொண்ட பரிமாற்றல் நடைமுறை ஆகியவற்றினூடாக தமது வாடிக்கையாளர்களுக்கும், தொடர்புபட்ட ஏனைய தரப்பினருக்கும் பெறுமானத்தைத் தோற்றுவிக்கும் வகையில் நிறுவனம் ஒன்றின் கோட்பாடு மற்றும் மத்திய வணிக செயல்பாடு ஆகியவற்றின் மூலாதாரம் சந்தைப்படுத்தலே என்ற அனுமானத்துடன் நாம் தொழிற்பட்டு வருகின்றோம். டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்கின்ற நிலையில், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் என்பது ஒவ்வொரு வர்த்தகத்தைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையைப் பொறுத்த வரையில் மிகவும் புத்தாக்கமான ஆழ்ந்த அறிவு மற்றும் மிகச் சிறந்த திறமைசாலிகளை எம்மால் காணமுடிகின்றது. ஆகவே, இலங்கையில் டிஜிட்டல் துறை சந்தைப்படுத்துனர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் அளிக்கும் ஒரு மேடையைத் தோற்றுவிக்கும் வகையில் SLIM DigisAwards 2018 விருதுகள் நிகழ்வை அறிமுகப்படுத்துவதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்,´ என்று குறிப்பிட்டார்.

SLIM Digis விருதுகள் நிகழ்வின் செயற்திட்ட தலைவரான நுவான் கமகே அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ´நாட்டில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கட்டமைப்பை சிறப்பாக முன்னெடுத்துச் சென்று, ஊக்குவிக்கும் நோக்குடனேயே SLIM DigisAwards விருதுகள் நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை பிரதிபலிக்கும் வகையில் விருதுகளுக்கான பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன,´ என்று குறிப்பிட்டார்.

இந்த விருதுகள் செயற்திட்டத்தின் பிரதித் தலைமை அதிகாரியான ரொஷான் பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ´முன்னணி வாடிக்கையாளர் சந்தைப்படுத்துனர்கள், டிஜிட்டல் தொழிற்பாட்டாளர்கள், விளம்பர முகவர் மூலோபாய வகுப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் ஏனைய வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீன நடுவர் குழுவால் நுழைவுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். புத்தாக்கமான மற்றும் முன்மாதிரியான ஆக்கங்களை ஏற்பாட்டுக் குழுவினர் ஊக்குவிக்கின்றனர்,´ என்று குறிப்பிட்டார்.

இவ்விருது வழங்கல் நிகழ்விற்கு முன்பதாக, ஒரு பிரத்தியேக நிகழ்வான SLIM Digi Fest என்ற டிஜிட்டல் சந்தைப்படுத்;தல் பெருவிழா ஒன்றையும் SLIM ஏற்பாடுசெய்யவுள்ளது. சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பெறுமதிச் சங்கிலி மாற்றங்களை வழங்கக் கூடிய டிஜிட்டல் சேவைகள், கருவிகள் மற்றும் டிஜிட்டல் தளமேடைகளை நிறுவனங்கள் வெளிக் காண்பிப்பதற்கான ஒரு களமாக அமையும் வகையில் இந்நிகழ்வு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அனைத்து டிஜிட்டல் சேவை முகவர் நிறுவனங்கள், உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கும் பக்க ஆதரவு சேவை வழங்கல் நிறுவனங்கள் ஆகியன நிறுவன - வாடிக்கையாளர், நிறுவன - நிறுவன டிஜிட்டல் சேவைகளை இதன் மூலமாக வெளிக்காண்பிக்க முடியும்.

மேலும், Digi Fest நிகழ்விற்கு இணையாக டிஜிட்டல் வல்லுனர்கள் குழுவின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதுடன், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரபலமான தலைப்புக்களில் கலந்துரையாடலை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இப்பிரத்தியேக நிகழ்வை பொதுமக்கள் பிரவேசக் கட்டணம் எதுவுமின்றி கலந்து கொண்ட பயன் பெறமுடியும். இலங்கையிலுள்ள அனைத்து டிஜிட்டல் மற்றும் படைப்பாக்கத்துறை முகவர் நிறுவனங்களும் பங்குபற்றக் கூடிய வகையில் போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வர்த்தக நாமம் அல்லது வாடிக்கையாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் இரு வகையான நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விடயத்தின் கட்டமைப்பு, சவால், பிரச்சாரத்தின் நோக்கங்கள், இலக்கு வைக்கப்படும் பிரிவினர், சிந்தனை மற்றும் மூலோபாயம், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல், செயல்படுத்தல் மற்றும் பிரச்சாரத்தின் தாக்கம் ஆகிய அம்சங்களின் கீழ் நுழைவுகளுக்கான மதீப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இப்போட்டியின் அதிமுக்கியமான விருதாக ´டீநளவ னுபைவையட ஆயசமநவiபெ ஊயஅpயபைn´ என்ற தலைப்பிலான விருது வழங்கப்படவுள்ளது. வங்கிச்சேவை, நிதி மற்றும் காப்புறுதி, தொலைதொடர்பாடல் / தகவல் தொழில்நுட்பம் / இணையசேவை மற்றும் மென்பொருள், பொழுதுபோக்கு, விருந்தோம்பல், பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் பயிற்சிசேவைகள், சுகாதாரப் பராமரிப்புசேவைகள் / உடல்நலன் / வைத்தியசாலைகள், நிர்மாணம் மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு, சில்லறை வர்த்தகம் (நவநாகரிகம்/நுகர்வோர் இலத்திரனியல்) - பாரம்பரிய மற்றும் இணைய மார்க்கம், ஊடகம் மற்றும் பத்திரிகை வெளியீடுகள், உணவு / பானவகை, அழகு / பிரத்தியேக பராமரிப்பு / வீட்டுப் பராமரிப்பு, வர்த்தக நிறுவனம் தோற்றம் / வர்த்தக சமூக நலன்புரி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் போன்ற பல்வேறுபட்ட தொழிற்துறைகளின் மத்தியில் இவ்விருதுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேற்குறிப்பிட்ட விருதை விட ஏனைய பல சிறப்பு விருதுகளும் SLIM Digis competition 2018 நிகழ்வில் வழங்கப்படவுள்ளன. “Best use of Branded Content”, “Best Digital Marketing Innovation”, “Best use of Mobile for Marketing” மற்றும் “The Digital Marketing Grand Prix” ஆகிய தலைப்புக்களிலேயே இந்த சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. மிகச் சிறந்தஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரபிரிவின் கீழ் மேற்குறிப்பிட்டவிருதுகள் தெரிவுசெய்யப்படவுள்ளன. வாடிக்கையாளர் மற்றும் விளம்பர முகவர் பங்காளர் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தங்க, வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படவுள்ளன. அடுத்த சுற்றுக்காக தேர்ந்தெடுக்கும் முதற் சுற்றுமற்றும் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் இறுதிச் சுற்றுஆகிய இரு கட்டங்களாகமதிப்பீட்டு நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கை டிஜிட்டல் தொழிற்துறையானது தொடர்ந்தும் பல வர்த்தக நாமங்களை வழிநடாத்திச் செல்கின்றது. தொழிற்துறையில் மிகவும் நன்மதிப்புப் பெற்ற சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில் வல்லுனர்களால் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக போட்டியின் விருதுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. டிஜிட்டல் துறையில் தலைசிறந்த ஆக்கம் மற்றும் திறமைகளைக் கொண்டாடுவதே இதன் நோக்கமாகும்.

அனைத்து வர்த்தக நாம பாதுகாவலர்கள், படைப்பாக்க, விளம்பர மற்றும் டிஜிட்டல் முகவர் நிறுவனங்களை இப்போட்டியில் பங்கு கொள்ளமுன் வருமாறு SLIM அழைப்பு விடுகின்றது. இப்போட்டிக்கான நுழைவுகள் 2019 ஜனவரி 8 முதல் 2019 பெப்ரவரி 11 வரை ஏற்றுக்கொள்ளப்படும். போட்டிக்கு முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் போட்டியாளர்கள் வழங்கவுள்ளனர். இதற்கான முதலாவது முடிவுத் திகதியாக 2019 ஜனவரி 28 ஆம் திகதி அமைந்துள்ளதுடன், இறுதிமுடிவுத்திகதியானது 2019 பெப்ரவரி 11 ஆகும். பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்படுகின்ற அனைத்து போட்டி நுழைவுகளுக்கும் தலா ரூபா 10,000/= கட்டணம் அறவிடப்படுவதுடன்,பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற நுழைவுகளுக்கான கட்டணம் தலா ரூபா 12,000/= ஆகும்.