Back to Top

2018 தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2018 இல் மூன்றாவது தொடர் விருதை CDB சுவீகரிப்பு

2018 தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2018 இல் மூன்றாவது தொடர் விருதை CDB சுவீகரிப்பு

January 9, 2019  04:27 pm

Bookmark and Share
2018 இல் தொடர்ச்சியான பல விருதுகளை சுவீகரித்துள்ள சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), தேசிய வியாபார சிறப்பு விருதுகள் (NBEA) 2018 இல் தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக வங்கி சாராத நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பிரிவில் விருதை சுவீகரித்திருந்தது. சிறப்பான வகையில் தமது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் தேசிய வரத்தக சம்மேளனத்தினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 15 ஆவது வருடமாக தேசிய வியாபார சிறப்பு விருதுகள் (NBEA) விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை சுவீகரித்தமை தொடர்பாக CDB இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான மஹேஷ் நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், ´தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இந்த விருதை வெற்றியீட்டியிருந்தமை தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். குறிப்பாக வங்கி சாராத நிதிசார் நிறுவனங்கள் துறையில், நாம் இந்த கௌரவிப்பை பெற்றுள்ளமையினூடாக, எம்மால் பாரிய பொறுப்பு நிறைவேற்றப்படவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில,; நாம் தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேம்படுத்துகின்றமையினூடாக, எமது நிறுவனம் பெறுமதிகள், மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்றமை உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், எமது செயற்பாடுகள் வெளிப்படையானவையாகவும், பொறுப்பு வாய்ந்த வகையில் அனைவருக்கும் சேவையாற்றுவதையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது´ என்றார்.

தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் என்பது ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டள்ளதுடன், வளர்ச்சியடைந்து வரும் வியாபாரங்களை பிரதிபலிக்கும் வகையில், மதிப்பீட்டு விதிமுறை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. தனது நவீனமயத்துவம் மற்றும் பாரம்பரியம், புத்தாக்கம் மற்றும் அனுபவம் போன்றவற்றினூடாக, இந்த சகல பிரிவுகளிலும் CDB உயர் பெறுபேறுகளை எய்தியிருந்தமை உறுதியாகிறது. ´இந்த ஏழு பிரிவுகளிலும் எனது அணியினர் சிறப்பை எய்தியுள்ளனர் என்பதை நான் அறிந்துள்ளேன்.´ என நானயக்கார மேலும் குறிப்பிட்டார். CDB ஐ இந்த விருதுக்காக தெரிவு செய்த பிரிவுகளில் தலைமைத்துவம், கூட்டாண்மை மேலாண்மை, திறன் கட்டியெழுப்பல், வினைத்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை சென்றடைவும், நிதிப் பெறுபேறுகள், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சூழல் நிலைபேறாண்மை போன்றன அடங்கியுள்ளன.

அண்மையில், சிறந்த கூட்டாண்மை நிறுவன நிலைபேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை CDB சுவீகரித்திருந்தது. இந்த விருதுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் காணப்படும் சிறந்த பத்து கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில் ஒன்றாக CDB உள்வாங்கப்பட்டுள்ளதுடன், 15 பில்லியன் ரூபாய்க்கு உட்பட்ட புரள்வு பிரிவில் உயர் விருதை பெற்றுக் கொண்டது. CDB தனது பயணத்தை மக்கள், புவி மற்றும் இலாபம் ஆகிய பிரிவுகளில் ஒப்பற்ற வகையில் முன்னெடுத்து வருகிறது. ´எமது பயணம் சிறந்த வெகுமதிகளை வழங்கியுள்ளது´ என CDB இன் 20 வருடங்களுக்கு மேலான நிலைத்திருப்பு தொடர்பில் நாணயக்கார தெரிவித்தார். ´எமது வியாபாரத்தை உறுதியான நிதி உறுதித் தன்மையில் பேணியுள்ளதுடன், அது மாத்திரமின்றி, எமது நிலைத்திருப்புக்காக எமது பங்காளர்களுடன் தொடர்ச்சியான ஈடுபாடுகளை பேணி வருவதுடன், அவர்கள் மீதான எமது பொறுப்புகளை தவறாமல் நிறைவேற்றியும் வருகிறோம். நீண்ட கால அடிப்படையிலான உறவுகளை கட்டியெழுப்புவது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளதுடன், எம் அனைவருக்கும் வெற்றியை தரும் வகையில் இது அமைந்திருக்கும் எனவும் நாம் கருதுகிறோம். மேலும் சமூக பிரச்சினைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் அக்கறையுடன் செயலாற்றுகிறோம். எமது வியாபாரத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு இவை பக்கபலமாக அமைந்துள்ளன.´ என மேலும் குறிப்பிட்டார்.