Back to Top

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

January 10, 2019  11:21 am

Bookmark and Share
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பிட்டிபொல மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (09) மாலை 2.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை, வெலகெதர பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பிரபாத் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.